ரூ.1000 உதவித்தொகை மாணவிகள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்| PENKALVI SCHOLORSHIP - 2022
உயர்கல்வித்துறை – மாணவியர்களுக்கான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டம் – மாணவியர் விவரங்களை இணையதளத்தில் உள்ளீடு செய்தல் – வழங்குது தொடர்பாக.
ரூ.1000 உதவித்தொகை
தொழில்நுட்ப கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்வி இளநிலை (Undergraduate) பயிலும் மாணவிகளுக்கான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டம் என்ற திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு கீழ்கண்ட வழிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும்.
READ ALSO THIS: அரசு பேருந்து PANIC BUTTON பயன்பாடு அறிந்துகொள்வோம்
https://penkalvi.tn.gov.in
தற்போது, இத்திட்டத்தினை செயல்படுத்த ஏதுவாக https://penkalvi.tn.gov.in என்ற முகவரியில் இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.
மேற்காண் இணையதளத்தில், இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவியர்களின் விவரங்களை 25.06.2022 முதல் 30.06.2022க்குள் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உடனடியாக அந்த இணையதளத்தில் பதிவிடப்பட வேண்டும்.
தகுதியானர்வர்கள் யார்?
அரசு பள்ளிகளில் (Governement Schools, Corporation Schools, Municipal Schools, Panchayat Union School, Adi Dravidar and Tribal Welfare Schools, Kallar Reclamation Schools, Forest Department School and other schools managed by government departments), 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று அரசு, அரசு உதவிபெறும், சுயநிதிக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உயர்கல்வியை தொடரும் மாணவியர் இத்திட்டத்தில் பயன்பெறுவர்.
என்ன ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்
இத்திட்டத்தினை இளநிலை பயிலும் மாணவியரிடம் இருந்து அவர்களது சுய விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் பயின்ற அரசு பள்ளி விவரங்கள் கோரப்படுகின்றன.
மாணவியர் கீழ்கண்ட ஆவணநகல்களை கொண்டு வர வேண்டும்
- ஆதார் நகல்,
- வங்கி கணக்கு புத்தக நகல்,
- பத்து மற்றும் பன்னிரென்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல்,
- பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல்
விவரங்கள் சார்ந்த மாணவியர் மற்றும் பொறுப்பாசிரியர்கள் மூலம் உள்ளீடு செய்யப்பட வேண்டும். சரியான விவரங்கள் உள்ளீடு செய்யப்படுவதை சார்ந்த துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
மாணவியர் பதிந்திடும் தங்களின் அலைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்படும் என்பதால், அலைபேசியை தவறாது கொண்டு வர வேண்டும்.
இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவியர்க்கு தகவல் அளித்து கல்லூரிக்கு வரவழைத்து தேர்வு நடைபெற்றாலும் தேர்வு முடிந்த பிறகு (முற்பகல் அல்லது பிற்பகல்) இந்த விவரங்களை விரைந்து உள்ளீடு செய்தல் வேண்டும்.
இணையதள வசதி உள்ள மாணவியர்கள் தாங்களாகவே தங்களது கைப்பேசி அல்லது கணினி வாயிலாக மேற்காண் இணைய முகவரியை பயன்படுத்தி தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்துகொள்ளலாம். இதனை சம்மந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்து கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இத்திட்டத்தினை தொழில்நுட்ப கல்வி ஆணையர் மற்றும் கல்லூரி கல்வி இயக்குனர், அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி கல்லூரி வாரியாக கண்காணித்து உடனுக்குடன் விவரங்கள் பதவிடப்படுவதை உறுதி செய்து அனைத்து மாணவியர் விவரங்களும் 30.06.2022க்குள் பதவிடப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்குள் கல்லூரி வாரியாக பதிவிடப்பட்ட மாணவியரின் எண்ணிக்கை குறித்த அறிக்கை தவறாது அரசுக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, உயர் கல்வித்துறை செயலாளர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
PENKALVI SCHOLORSHIP PDF – DOWNLOAD HERE
SUBSCRIBE NOW - Click Hear